Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரியலையே… நடிகை விசித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகை விசித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான முத்து படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் விசித்திரா. இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார் ‌‌. மேலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை விசித்ரா சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதையடுத்து இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.

விசித்ரா

இதன்பின் பட வாய்ப்பு குறைந்ததால் நடிகை விசித்ரா திருமணம் செய்துகொண்டு பூனேவில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகை விசித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை விசித்ராவா இது? என ஆச்சர்யமடைந்துள்ளனர்.

Categories

Tech |