Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

14 வகையான மளிகை பொருட்கள்…. விநியோகம் நடைபெறுகிறதா…. கலெக்டர் நேரில் சென்று ஆய்வு….!!

ரேஷன் கடையிலும், அம்மா உணவகத்திலும் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடக்கும் பணிகளை கேட்டறிந்துள்ளார்.

வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி வள்ளலாரின் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண நிதி 2 ஆயிரம்ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுகிறதா  என்பதையும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பொருட்களை பெற்று செல்கிறார்களா என்பதையும் அவர் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம்  ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கியுள்ளார்.

அதன்பின் அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு அங்கு சமைக்கப்பட்ட உணவுகளை பரிசோதனை செய்து பார்த்துள்ளார். இதனைத்தொடர்ந்து அம்மா உணவகத்தில் கொடுக்கப்படும் உணவு சுத்தமாக இருக்கிறதா என்றும் தினசரி எத்தனை பேருக்கு உணவு சமைக்கப்படுகிறது என்றும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார். மேலும் அம்மா உணவகத்தில் எத்தனை பணியாளர்கள் பணிபுரிகிறார்கள் என்றும் அவர் கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முககவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று அலுவலர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுறை, வழங்கல் அலுவலர் காமராஜ், துணை பதிவாளர் முரளி கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |