Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…இந்த பெல்ட் 35,000 ரூபாயா..? மகளை அம்மா கேட்ட கேள்விதான் ஹைலைட்… வைரல் பதிவு…!!!

மகள் 35 ஆயிரம் ரூபாய் செலவிட்டு ஒரு பெல்ட்டை வாங்கியதற்காக அவரது அம்மா அவரை திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெரும்பாலான மக்கள் மாத சம்பளத்தை வாங்கி அவற்றை பட்ஜெட் போட்டு குடும்பத்திற்கு செலவு செய்து வாழ்ந்துவருகின்றனர். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏதாவது வேறு ஒரு பொருளின் மீது ஆசை பட்டால் அதை வாங்குவதற்கு பெரிதும் முயற்சி செய்கின்றனர். ஆனால் சில சமயங்களில் அதன் விலை காரணமாக நாம் வாங்குவதையே விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த வீடியோவில் 35 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய மகளை அவரது அம்மா அனிதா திட்டும் நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அனிதா என்பவர் தனது மகள் சபி, என்பவர் வாங்கிய புது பெல்டின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

குசி என்ற பிராண்டை சேர்ந்த அந்த பெல்டின் விலை 35 ஆயிரம் ரூபாய் ஆகும். அதை பார்த்த அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் கேட்ட கேள்விதான் மிகவும் காமெடியாக இருந்தது. இந்த பெல்ட்டை பார்க்கும் போது டெல்லியில் உள்ள டிபிஎஸ் ஸ்கூல் பெல்ட் போல இல்லையா? இதை போய் எதற்காக வாங்கினாய் என்று கூறுகிறார். பச்சை சிவப்பு வண்ணத்தில் இருக்கும் அந்த பெல்டில் குஷி பிராண்டின் லோகோ இடம் பெற்றுள்ளது.

இந்த பெல்ட் டிபிஎஸ் ஸ்கூல் பெல்டை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது. இதை போல் இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்கிறாயே? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இந்த பெல்டை 150 ரூபாய்க்கு வாங்கி இருக்கலாமே? என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த மகள் பின்னாடி சிரித்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதை பார்த்த பலரும் தங்களது அம்மாவை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது என்று கருத்து பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |