பிரிட்டன் இளவரசி டயானாவின் இறப்பிற்கு முன்பு அவரின் நண்பருடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசி டயானா, பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் கடந்த 1997ம் வருடத்தில் வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் மறைந்து 20 வருடங்களுக்கு மேலான பின்பும் அவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது. இந்நிலையில் Richard Kay என்ற நபர் டயானா மரணத்திற்கு முன்பு இறுதியாக அவரிடம் தொலைபேசியில் பேசினேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
அவர் தற்போது இது பற்றி கூறியுள்ளதாவது, அன்று இரவில் நான் இளவரசி டயானாவுடன் பேசியிருந்தேன். அவர், இப்போது நான் சிறந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன், என் வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கவிருப்பதாக தெரிவித்தார். மேலும் அவரின் 2 மகன்களை காண ஆசையுடன் இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
டயானா குறித்து ஆவணப்படம் ஒன்று வெளிவரவுள்ளது. எனவே அதற்காக டயானா இறுதியாக தொலைபேசியில் பேசிய தகவல்கள் தொடர்பில் இவர் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை 1 ஆம் தேதியன்று இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாள், அதற்காக இந்த ஆவணப்படம் வெளியிடப்படவிருக்கிறது.
ஜூலை 1 ஆம் தேதி அன்று இளவரசர் வில்லியமும் ஹரியும் இணைந்து தங்கள் தாயாரின் சிலையை ஒன்றாக திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.