Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாயமான வங்கி ஊழியர்…. தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாயமான வங்கி ஊழியர் உடல் துண்டான நிலையில் மீட்கப்பட்டதை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மணி திடீரென வீட்டை விட்டு வெளியே சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதே நேரத்தில் மணி தனது செல்போனையும் வீட்டில் வைத்து விட்டு சென்றதால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவரது உறவினர்கள் நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தோவாளையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் துண்டான நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி அவரது சட்டையில் இருந்த அடையாள அட்டையை வைத்து அவர் வங்கி ஊழியர் மணி என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து மணியின் சடலத்தை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரயிலில் அடிபட்டு மணியின் உடல் துண்டாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்பதை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |