Categories
மாநில செய்திகள்

“சசிகலா தாய் அல்ல பேய்”…. அதிமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்….!!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை.

இந்நிலையில் சசிகலா பேசிய ஆடியோ ஒன்றில், தாயிடம் இருந்து குழந்தைகளை எப்படி பிரிக்க முடியாதோ அதனைப்போலவே தொண்டர்களை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனை விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சசிகலா தாயாக இருந்தால் தானே பிரிக்க முடியாது. பேயாக இருந்தால்…. என்ற விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |