தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்ற ஆட்சியில் மின் பராமரிப்பு நடக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து இன்று மின் பராமரிப்பு மேற்கொள்வது குறித்தும் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்தும் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.