ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருட வந்த திருடர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது கதவில் எழுதிவைத்த வாசகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் புண்டாக் என்ற பகுதியில் கடந்த 10 நாட்களாக சுமார் பல வீடுகளில் சிறிது திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. திருடர்கள் ஒரே வீட்டில் திருடாமல் ஒரு கும்பலாக இணைந்து ஒரு நாளில் பல வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 12 சனிக்கிழமை இரவு அந்த திருட்டு கும்பல் அப்பகுதியில் இருக்கும் காவல் துறையில் பணிபுரியும் ஜிதேந்திர சிங் என்பவரின் வீட்டில் புகுந்து பணம் நகை போன்றவற்றை கொள்ளையடித்தது.
இதையடுத்து வாடகை வீட்டில் வசிக்கும் மனோஜ் அகர்வாலின் வீட்டிலும், அதன் பக்கத்து வீடான சஞ்சீவ் குமார் என்பவரின் வீட்டில் கொள்ளையடித்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இன்னும் திருடர்களை பிடிக்க வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு கதவில் “எங்கள் வீடு ஏற்கனவே திருடப்பட்டு விட்டது. தயவுசெய்து நேரத்தை வீணடிக்காமல் வேறு வீட்டை பார்க்கவும்” என்று திருடர்களுக்கு வேண்டுகோள் செய்தியை அப்பகுதி மக்கள் எழுதியுள்ளனர்.