முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வந்த காதலன் காதலியை பார்த்து அழுத வீடியோ வைரலாகி வருகிறது.
தற்போது திருமண சீசன் என்பதால் பல மாநிலங்களில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. தினமும் ஒரு வீடியோ திருமணம் சம்பந்தமாக வைரலாகி வருகின்றது. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். திருமணத்தில் பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து புதிய வாழ்க்கையைத் துவங்க வேண்டும். அப்படி சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் மணமேடைக்கு வந்து மணப்பெண்ணிற்கு லட்டு ஊட்ட முயற்சி செய்தார்.
வடமாநிலங்களில் ஒரே வயதுடையவர்கள் இவ்வாறு இனிப்புகளை பரிமாறுவது வழக்கம். அதுபோல் மணப்பெண்ணிற்கு லட்டு ஊட்டும் போது அந்த மணப்பெண் வாங்க மறுக்கிறார். இதனால் அவர் துக்கம் தாங்காமல் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் அழுதபடியே மண்டபத்தை விட்டு வெளியில் செல்கிறார். பிறகு இந்தி பாடலும் இசைக்கின்றது. இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.