மாநகராட்சி அலுவலகத்தில் கட்டாயப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஊழியர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள எருமாபாளையம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் 30 ஆண்டுகாலமாக பணியாற்றுகிறார். இந்நிலையில் அருள் மாவட்ட அலுவலகத்தில் உள்ள இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட சக ஊழியர்கள் அருளை தடுத்தி நிறுத்திவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அருளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின்போது அருள் மாநகராட்சி அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றி வருவதாகவும், கட்டாய பணியின் பெயரில் அருளை ஆணையாளருக்கு உதவியாளராக பணிநியமனம் செய்தது தெரியவந்தது. இதனால் அருள் தான் படித்த பொறியியல் பணியை கொடுக்காமல் வேறு பணியில் கட்டாயப்படுத்தி திணிக்கப்படுவதால் மன விரக்தியில் தற்கொலைக்கு முயற்சி செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.