நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் நாளை முதல் தெலுங்கானாவில் ஊரடங்கு ரத்தாகிறது .இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்களும் ஜூலை 1ம் தேதி முதல் திறப்பதற்கு தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மாணவர்கள் அனைவரும் தற்போது கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.