நடிகை அம்ரிதா ஐயர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை அம்ரிதா ஐயர் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படைவீரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான வணக்கம்டா மாப்ள படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் நடிகர் கவினுடன் இணைந்து லிப்ட் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகை அம்ரிதா ஐயர் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை அம்ரிதா ஐயர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.