Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘நவரசா’ வெப் தொடர்… ரிலீஸ் எப்போது தெரியுமா ?…!!!

இயக்குனர் மணிரத்னம் தயாரித்துள்ள நவரசா வெப் தொடரின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சித்தார்த், அதிதி பாலன், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

The Right-Wing Hindu, Hypernationalist Politics of Mani Ratnam's Films |  HuffPost none

மேலும் இந்த வெப் தொடருக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்திக், ஜிப்ரான், ரான் ஈதன் யேஹன், அருள்தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் நவரசா வெப் தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி  நெட்ப்ளிக்ஸில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |