சூதாட்டத்தில் தகராறு ஏற்பட்டதால் அண்ணன் – தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வடக்கு தெருவில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் அப்பகுதியில் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் பந்தயத்தில் பணத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முத்துக்குமார் வாக்குவாதம் செய்ததால் அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதன் பிறகு அருகில் உள்ளவர்கள் முத்துக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை அடுத்து முத்துக்குமார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வடக்குத் தெருவில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் அவரின் சகோதரர் சிம்சனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கிற்கு தொடர்புடைய சூர்யா மற்றும் செல்வம் ஆகிய இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.