இளம் மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சந்திரபாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சந்திரபாடி மீனவர் காலனியில் வீரகாளி என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருக்கிறார். இவரின் மகன் தீபக் கடந்த 16 – ஆம் தேதியன்று சக மீனவர்களுடன் சந்திரப்பாடியில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தீபக் திடீரென நடுக் கடலில் தவறி விழுந்து மாயமானார். இதனை அடுத்து உடன் இருந்த சக மீனவர்கள் கடலில் இறங்கி தேடிப் பார்த்தும் தீபக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த கடலோர காவல் நிலையத்தில் சக மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் படி கடலோர காவல்துறையினர் காணாமல் போன மீனவரின் உடலை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை நேரத்தில் தரங்கம்பாடி பகுதியில் நடுக்கடலில் தீபக்கின் உடல் மிதந்து வந்துள்ளது. அதன்பின் தீபக்கின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கடலோர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு இளம் மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.