நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிடில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியலை அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.