மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன முதலியார் சாவடி பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் சென்னை புதுச்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நண்பர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.