Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அவள் இல்லாம இருக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மருதிபட்டி பகுதியில் மைதீன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் மைதீனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த மைதீன் தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட் எடுத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மைதீன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |