சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமாஞ்சோலை கிராமம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பூவந்தி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பதும், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வேலுச்சாமியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.