கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்வு தொடர்பாக பிரச்சினை நீடித்து வந்தது. இதையடுத்து இதற்கு தீர்வு காணும் வகையில் பெங்களூருவில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் மகாராஷ்டிரா நீர்வளத் துறை அமைச்சர் ஜெயந்த் பார்ட்டியில், உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெள்ளத்தை திறம்பட நிர்வாகம் அதற்காக கிருஷ்ணா மற்றும் பீமா நதி படுகையில் உள்ள அணை பகுதிகளில் பெய்த மழை மற்றும் தண்ணீர் வெளியேற்றம் குறித்த நிகழ்வு நேர தகவல்களை இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து 4 டிஎம்சி தண்ணீரை பெறுவதற்கும், அதற்கு பதிலாக அந்த மாநிலத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விடுவதற்கும் ஒரு தொழில்நுட்ப குழு செயல்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.