மணல் அள்ளிய குற்றத்திற்காக 4 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குருன்பி வயல், திருமணஞ்சேரி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி வெளிமாவட்டங்களுக்கு கடத்துவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளார்.
இதையடுத்து தாசில்தார் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் அள்ளி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.