Categories
உலக செய்திகள்

வேலைக்கு போகனுன்னு சொன்னதுக்காக…. வாலிபர் செய்த கொடூர செயல் …. பிரபல நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் …!!!

தந்தை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் அயோவா பகுதியில் ஜேன் ஜாக்சன் என்பவர் தனது மனைவி மெலிசா ஜாக்சன் மகன் அலெக்சாண்டர் ஜாக்சன் மற்றும் மகள் சபரீனா ஜாக்சன் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மகன்  அலெக்சாண்டர் தங்கள் வீட்டிற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் புகுந்து தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும்  துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி தப்பிச் சென்று விட்டார் என்று செல்போனில் போலீசாரிடம் பதட்டத்துடன் கூறியுள்ளார். இதையடுத்து அதிவிரைவு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் சுட்டு கிடந்ததை போலீசார் கண்டுள்ளனர் .ஆனால் அலெக்சாண்டர் காரில்  காயத்துடன் இருந்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது குறித்து  வீட்டை முழுமையாக சோதனை செய்த போலீசார் வீட்டில் மர்ம நபர் வந்ததற்கான அடையாளமோ, கொள்ளை  நடந்ததற்கான சான்றுகளோ  கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அலெக்சாண்டரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதில் தந்தை ஜாக்சன் அலெக்சாண்டரிடம்  சீக்கிரம் வேலைக்கு போக வேண்டும் அப்படி இல்லையெனில் வீட்டை விட்டு வெளியே போ என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர் குடும்பத்தினரை வீட்டிலிருந்த துப்பாக்கியால் சுட்டு  கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து அவர் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து கவுண்டி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |