Categories
தேசிய செய்திகள்

6 – 8 வாரத்தில் கொரோனா 3- வது அலை தாக்கும்…. எய்ம்ஸ் மருத்துவர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா முதல் அலையில் அதிக பாதிப்புகளும் இரண்டாவது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை அடுத்து மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது எனவும் 6 முதல் 8 வாரத்தில் மூன்றாவது அலை தாக்கும் என்றும் எய்ம்ஸ் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். எனினும் மூன்றாவது அலையை எதிர் கொள்ள மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |