Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஊரடங்கு ரத்து…. எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததால் இன்று  காலை 6 மணி முதல் ஊரடங்கு முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கும் கிடையாது. இன்று  முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். திரையரங்குகள், மால்கள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் வழக்கம்போல் அனுமதி என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |