நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், அங்கு 16 மாவட்டங்களில் நாளை முதல் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என்றும் அனைத்து விடுதிகள், உணவகங்களும் குளிர்சாதன வசதி இன்றி மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.