தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாரே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது.
ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக மின்வாரிய பராமரிப்புக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் அடையாறு, ஆவடி, சோளிங்கநல்லூர், போரூர், அலமாதி, தாம்பரம், கேகே நகர், ரெட்டேரி, செம்பியம், புழல்,மயிலாப்பூர் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளில் ஜூன் 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்றும் மதியம் ஒரு மணிக்கு மேல் மின் வினியோகம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய பராமரிப்புக்காக மின்வினியோகம் நிறுத்தபடுவது குறிப்பிடத் தக்கது.