Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. மெசேஜ் அனுப்பி பெண்ணிடம் ரூ.12 லட்சம் அபேஸ்…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக அனைத்து சேவைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் பல மோசடிகளும் நடக்கிறது. ஆன்லைன் மூலம் பணத்தை பறி கொடுத்தவர்கள் ஏராளம். அரசு பல எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்த வந்தாலும் சிலர் ஏமாற்றப்பட்டு தான் வருகிறார்கள். அதன்படி ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூருவில் ஒரு பெண்ணின் செல்போனுக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்குமாறு மெசேஜ் வந்தது.

 

இதையடுத்து அந்தப் பெண் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, வங்கி ஊழியர் பேசுகிறேன் நான் அனுப்பும் லிங்கில் வங்கி விவரங்களை தெரிவிக்கும்படி யும் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த லிங்கில் வங்கி விவரங்களை பின் அனுப்பிய நிலையில், ரூ.12.29 லட்சம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |