Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நேற்று ஒரே நாளில் 30,740 நபர்களுக்கு தடுப்பூசி….. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று 30,470 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கோவிஷில்டு முதல் தவணை 26,646 நபர்களுக்கும், இரண்டாவது தவணை 2,436 நபர்களுக்கும், கோவாக்சின் முதல் தவணை 957 நபர்களுக்கும், இரண்டாவது தவணை 701 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |