Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கு ஜூன் 21-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் முக்கியமாக பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் 50 சதவீதம் பயணிகளுடன் மாநகர பேருந்துகளை இயக்கலாம் என அதிகாரிகள் முதல்வரிடம் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் ஜவுளி கடைகள் மற்றும் சிறிய வழிபாட்டு தளங்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதி அளிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |