தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாரே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது.
தற்போது கடந்த ஓரிரு நாட்களாக சில பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பில்லை. சில இடங்களில் பழுது ஏற்படுகிறது. அதனால்தான் சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது. அதை உடனே சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்குகிறார்கள் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.