Categories
உலக செய்திகள்

இவங்கள பார்த்தா “என்னுடைய தாயை நினைவுபடுத்துது”…. மாளிகையில் நடந்த விருந்து…. கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர்….!!

மகாராணியாரின் சாந்தமான பேச்சும், அவருடைய நடவடிக்கையும் தன்னுடைய தாயை நினைவுப்படுத்தியதாக ஜி-7 மாநாட்டினுடைய கூட்டத்திற்கு பிறகு விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திலிருக்கும் காரன்வாலில் ஜி 7 நாடுகளின் 47வது உச்சி மாநாடு கூட்டம் நடைபெற்றது. இந்த ஜி-7 நாடுகளின் மாநாடு கூட்டத்தில் எலிசபெத் மகாராணியும் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து மகாராணியார் உச்சிமாநாடு கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரையும் வின்ஸ்டர் மாளிகையில் வைத்து நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் விருந்திற்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மகாராணியாரின் காவல் படையினர்கள் அரசு மரியாதையுடன் வரவேற்றுள்ளார்கள்.

இதனையடுத்து விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபரான ஜோ பைடனுடன் ராணி எலிசபெத் தனியாக பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர், தேநீர் விருந்தில் மகாராணி தனியாக தன்னுடன் பேசும்போது ரஷ்ய அதிபர் குறித்தும், சீன அதிபர் குறித்தும் கேட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மகாராணியாரின் செயல்பாடுகளும், அவரது பேச்சும் தன்னுடைய தாயை நினைவு படுத்தியதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |