தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த அனைத்து மக்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அரசு பள்ளி மற்றும் பெரியநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் சிறப்பு தடுப்பூசி போடும் முகமானது நடைபெற்றுள்ளது.
இதனால் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக கூட்டமாக குவிந்தனர். இதனையடுத்து கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கியுள்ளனர். இதனால் டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.