Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும்… முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வந்தது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், தற்போது சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர்.

அதேபோல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால், ஊரடங்கு வாபஸ் பெறுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும், அனைத்து வகுப்பு மாணவர்களும் நேரடி வகுப்பு தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |