Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்காகவே கொரோனா தடுப்பூசி முகாம்…. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,’ மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இதர வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும்   மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை 21 ஆம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தடுப்பூசி போடும் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை  பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |