Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்கே தொடர்ந்து நடக்கிறது… அடுத்தடுத்த விபத்துகள்… ஓட்டுநர்களின் கோரிக்கை…!!

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது மற்றொன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக கோவைக்கு நாக்பூரிலிருந்து கோழி உணவு ஏற்றிக்கொண்டு லாரியில் வந்துள்ளனர். இந்த லாரியை சென்னையில் வசிக்கும் ஓட்டுனர் ஜான் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரட்டை பாலத்தின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த லாரி சாலையில் நிலைதடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியுள்ளது. இதனையடுத்து செயல்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியுள்ளது.

இதனால் கோழிக்கு உணவு ஏற்றி சென்ற லாரி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது. இதில் மற்ற இரண்டு லாரிகளும் சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் லாரியை ஒட்டி சென்ற ஓட்டுனர்கள் அத்தியான், ஜான், அருள்மொழி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது பற்றிய தகவல் அருகில் இருக்கும் சுங்கச்சாவடியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் வரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயம் அடைந்த 3 லாரி ஓட்டுநர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் காவல்துறையினர் கிரேன் மூலமாக 3 லாரிகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்ற 2 நாட்களில் இப்பகுதி வழியாக சென்ற 8 லாரிகளுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து விபத்தைத் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |