சீனாவில் பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவில் பேராசிரியர் ஜாங் ஜீஜியான், ஹார்பின் பொரியல் பல்கலைகழகத்தில் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். மேலும் சீனாவின் மிகப்பெரிய அணு விஞ்ஞானியாகவும் திகழ்கிறார். இந்நிலையில், பேராசிரியர் ஜீஜியான் கடந்த 17ஆம் தேதியன்று காலையில் ஒரு கட்டிடத்திலிருந்து விழுந்து பலியானதாக அந்நாட்டின் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இது ஹார்பின் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியான அறிவிப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் ஜீஜியான் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் பேராசிரியர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தகவல் வேறு எதிலும் வெளியிடப்படவில்லை. மேலும் பல்கலைகழகத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் ஜீஜியான் பெயர் தலைமை பட்டியலில் நேற்றும் இருந்திருக்கிறது.