15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய வாலிபருக்கும் தானிப்பாடி பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தானிப்பாடி நிர்வாக அலுவலர் முத்து போலீசாருக்கு தகவல் அனுப்பி உள்ளார்.
இதையடுத்து தானிப்பாடிபோலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ,சமூக நல அலுவலர் அம்சவள்ளி மற்றும் சைல்ட் லைன் அலுவலர்கள் ஆகியோர் திருமணம் நடைபெற இருந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்று நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதோடு குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று பெற்றோருக்கு எடுத்துக்கூறினர். இதன் பிறகு அந்த சிறுமியை மீட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள காப்பகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.