சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுறித்து முன்னாள் மாணவிகள் புகார் அளித்தததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாணவிகளை அடிக்கடி ஆபாச ஓவியங்களை வரையச் சொல்லி துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் சிவசங்கர் பாபா மீது மாணவி ஒருவர் அளித்துள்ள புகார் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தனியாக நோட்டு வாங்கி வரச்சொல்லி ஆபாச படங்களை படமாக வரைந்து காட்ட வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். அவ்வாறு வரையும் மாணவிகளுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது