பருவ மழை பெய்ததால் தேங்காய்கள் அதிகளவில் சாகுபடி செய்தும் ஊரடங்கு காரணத்தால் உரிய விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை.
தர்மபுரி மாவட்டத்தின் சுற்றி அமைந்திருக்கும் பகுதிகளான காரிமங்கலம், அகரம், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, மல்லாபுரம் ஆகிய இடங்களில் தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் பருவமழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததினால் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் விளைவிக்கும் தேங்காய் வெளிமாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதனையடுத்து முழு ஊரடங்கு கட்டுப்பாட்டினால் சுபநிகழ்ச்சிகளும், கோவில் திருவிழாக்களும் மிகக் குறைந்த அளவே நடைபெற்று வருவதால் தேங்காய் தேவை குறைந்துவிட்டது. இந்தக் காரணத்தினால் தேங்காயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் சந்தை பகுதிகளில் மக்கள் அதிகம் வருவதினால் ஒரு தேங்காய் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததினால் விவசாயிகள் பெரும் வருத்தத்தில் இருகின்றனர்.