சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரதில் ஈடுபடுத்திய வாலிபரை போஸ்கோ சட்டத்தில் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர் .
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆவடியில் உள்ள பள்ளியில் ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி இந்த சிறுமி திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் இவரது பெற்றோர்கள் பல இடங்களில் சிறுமியை தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்த கவுதம் என்ற நபர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட பிறகு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கவுதமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.