Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்க சேர்க்க ஆரமிச்சிட்டோம்… தீவிரமாக நடைபெறும் பணி… அதிகாரிகளின் செயல்…!!

அரசு பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டிற்கான பாடபுத்தங்கள்  அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளும், அரசு நடுநிலைப் பள்ளிகளும், மேல்நிலைப் பள்ளிகளுகம், உயர்நிலை பள்ளிகளும் என மொத்தமாக 1,338 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 1,49,000 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இம்மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து அரசு பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாடப் புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு தனித்தனியாக பிரித்து அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்த பணியானது  தலைமையாசிரியர்களின் மேல் பார்வையில் வாகனங்களின் மூலமாக ஒவ்வொரு பள்ளிக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, இம்மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக இந்த கல்வி ஆண்டிற்கான புதிய பாடப்புத்தகங்களை ஒவ்வொரு பள்ளி கூடங்களுக்கும் அனுப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அனுப்பப்படும் பாடப்புத்தகங்கள் எல்லா பள்ளிகளிலும் பாதுகாப்பாக வைக்கப்படும். மேலும் பள்ளிகள் திறக்கும் போது மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |