போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 204 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டான ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் சிப்காட் பேருந்து நிலையம், சாவடி மற்றும் பள்ளேரி பகுதிகளில் காவல்துறையினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காதவர்கள் மற்றும் இன்சுரன்ஸ் செய்யாதவர்கள் போன்றோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறாக 204 வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து முககவசம் அணியாமலிருந்த 13 பேரிடம் தலா 200 ரூபாய் அபராதம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் காவல்துறையினர்கள் வசூலித்துள்ளனர்.