Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையோடு வரக்கூடாது… டாஸ்மாக் கடையில் தகராறு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கைக்குழந்தையுடன் டாஸ்மாக் கடைக்கு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏனாதி கரம்பை கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆவனம் கைகாட்டியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்கள் வாங்குவதற்கு தனது மோட்டார் சைக்கிளில் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊர்க்காவல் படை வீரர்கள் கைக்குழந்தையுடன் மது வாங்க சென்ற சங்கரை பார்த்துள்ளனர்.

இதனை அடுத்து ஊர்க்காவல் படை வீரரான ராஜகோபால் என்பவர் சங்கரிடம் கைக்குழந்தையுடன் மதுக்கடைக்கு வரக்கூடாது என எச்சரித்துள்ளார். இதனால் கோபமடைந்த சங்கர் ஊர்க்காவல் படை வீரரை தரக்குறைவான வார்த்தைகளால் அவதூறாக பேசியுள்ளார். இது குறித்து ராஜகோபால் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |