பருவ மழை காரணத்தால் நீர் வரத்து அதிகரித்த நிலையில் தற்போது 92.12 கன அடி குறைய தொடங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்தானது அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வினாடிக்கு 1, 500 கன அடியாக தண்ணீர் இப்பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து காலை நேரத்தின் நிலவரப்படி இப்பகுதிக்கு வினாடிக்கு 1, 800 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் நிலவரப்படி வினாடிக்கு 200 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்தக் காரணத்தினால் சீனி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் பாய்ந்து கொண்டு வருகிறது. இதனால் வரும் நீர் வரத்தை காவிரியின் உறைவிடமாக கொண்ட பிலிகுண்டுலுவில் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மேட்டூர் பகுதிக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 446 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது வினாடிக்கு 443 கன அடியாக குறைந்துள்ளது. இதன் மூலமாக டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் அணையின் நீர்மட்டமானது குறையத் தொடங்குகிறது. மேலும் 92.84 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 92.12 அடியாக குறைந்துள்ளது.