நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது, முதல்வரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள். ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில் குளிர் பகுதிக்கு போகும் போது இதே மாறி உடை அணிய வேண்டும். மனநோயாளிகள் சமூக வலைத்தளத்தில் இதையே வேலையாக வைத்து செய்கிறார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் நான் எப்படி இழிவாக பார்க்க முடியும் என்று சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , ரஜினி இன்னும் எத்தனை நாள் படம் நடிப்பார். அவருக்கு அப்பறம் விஜய் தான சூப்பர் ஸ்டார். அத வெச்சு எல்லாரும் சொல்லுறாங்க அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று. யார் யாரோ கட்சி ஆரம்பிக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை ஆனால் விஜய் என் தம்பி என்று சீமான் தெரிவித்தார். விஜய் குறித்து பேசியதற்கு சீமானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் இது குறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என சீமான் கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து எனவும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என்று தெரிவித்தார்.