Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினத்திற்கு முன் அனைவருக்கும் தடுப்பூசி…. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தடுப்பூசி திருவிழா தற்போது நடந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் வீணடிக்க படுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், புதுச்சேரி எங்குமுள்ள தடுப்பூசி மையத்தில் இதுவரை தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாமல் சீராக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதே இலக்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |