சிறுமியை கடத்தி சென்று 10 மாதங்களாக குடும்பம் நடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உறவினரான சூர்யா என்ற வாலிபர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அந்த சிறுமியை திருமணம் செய்து சூர்யா 10 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி சூர்யாவிடம் இருந்து தப்பித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி அளித்த புகாரின் படி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் சூரியா சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.