Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படி போடவே கூடாது… நாங்க ஏற்கனவே சொல்லிருக்கோம்… நோய் பரவும் அபாயம்…!!

சாலையில் கொட்டப்படும் மருத்துவ உபகரணங்களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாக்கமூலா என்ற இடத்தில் இருக்கும் சாலையோரம் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை கொட்டியவர் குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை. இது குறித்து அறிந்த சுகாதார பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று சாலையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் கூறும் போது, பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்ட கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சாலையோரம் வீசப்பட்ட இந்த மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மருத்துவ கழிவுகளை கொட்டிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |