தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் என்ற கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை ஏதும் இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து தனது அத்தை மகன்களான சுரேகா மற்றும் கனகா உஷாராணி என்று இரண்டு பெண்களிடமும் அவர் தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கும் தெரியாமல் இருவரும் காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இந்த இரண்டு பெண்களில் யாரை அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்ற விவாதம் வந்தது.
அப்போது இருவரையும் ஒன்றாக திருமணம் செய்து கொள்வதாக அவர் கூற, அதற்கு அந்த இரண்டு பெண்களும் சம்மதித்தால் தான் ஹைலைட். பெரிய பிளேட் எடுத்துட்டு வந்துரு இரண்டு குடும்பத்தினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அர்ஜுன் இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக நின்றுள்ளார். வேறு வழியின்றி பெரியவர்களும் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தனர். அத்தை மகள் இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார். இந்த திருமண விழா வீடியோவை பார்த்த பலரும் ரசித்து வருகின்றனர்.