Categories
தேசிய செய்திகள்

ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது… மத்திய அரசு…!!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவுறுத்தும் படி, சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மே 24ஆம் தேதி மத்திய அரசு இதற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு, 180 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.

அதில் கூறியுள்ளதாவது: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது. ஏனெனில் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் குறிப்பிட்ட 12 பேரிடர்களுக்கு, மாநில பேரிடர் மீட்பு நிதி இழப்பீடு வழங்கப்படும். கொரோனா காரணமாக இதுவரை 3.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். அத்தனை பேருக்கும் ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமானால் மாநில பேரிடர் மீட்பு நிதி முழுவதையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் கூடுதல் நிதிச்சுமையால், சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |